.

16 September 2009

school life II



+2 in School



+2 in School Fr tour

school life


II nd std


III std







9 September 2009

Brothers


mahe r maruthu



Ram Kumar




Rajesh


kannan na


Kannana anna


Nakesh


my family


amma ( now )



Amma



my appa


5 July 2009

ஈழத்து அகதியின் நாடோடிப் பயணம்

இது ஒரு ஈழத்து அகதியின் நாடோடிப் பயணம். கால்போன போக்கிலை நடந்து,கண்போன போக்கிலை பார்த்து வாய்க்கு வந்தபடியெல்லாம் கதைத்து.இன்றைக்கு வரைக்கும் நிற்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.சிவாஜியார் மாதிரி ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினேன் என்று சொல்லிவிட ஆசையாத்தான் இருக்கு ஆனாலும் வாழ்க்கை என்னவோ என்னுடன் கூடவே ஓடிவந்து கொண்டிருப்பதால் ஓரத்துக்கு ஓடாமல் ஒரு மைய வட்டமாய் சுற்றியோடிக் கொண்டிருக்கிறேன்.

வட்டத்துக்குள் வந்து விழுந்ததையெல்லாம் கொட்டிவிட விரும்பித்தான் இங்கே வந்திருக்கிறேன்.
மண்ணினல்ல வண்ணம் வாழலாம் நல் அகதிக்கு யாதுமோர் குறைவில்லை.இடையிடை அருட்டும் ஊர்ஞாபகங்களைத் தவிர

அம்மானின் மாவீரர் தினப் பேச்சு

பிரபாகரனின் மாவீரர் தினப் பேச்சு கேட்டிருப்பீர்கள் அம்மானின் பேச்சு யாராவது கேட்டீர்களா?நீங்கள் எங்கே கேட்டிருக்கப்போகிறீர்கள் அதெல்லாம் அந்தாள் கிளம்பிய இரண்டு மூண்டு மாதத்துக்குத்தான் ஒரு அலை அடிக்கும் பிறகு பாறாங்கல்லே தூக்கிப் போட்டாலும் அசும்பாத சமுத்திரமெல்லவோ நாங்கள்.

அம்மான் என்றவுடனை இரண்டு அம்மான்கள் நினைவுக்கு வருவார்கள்.ஒன்று இந்தியா தேடிக்கொண்டிருக்கும் பொட்டு அம்மான்மற்றது இந்தியாவைத் தேடிக்கொண்டிருக்கும் கருணா அம்மான்.

இதிலை பொட்டு அம்மான் விடுதலைப்புலிகள் இயக்கத்திலை மூத்த தலைவர் அந்தாளின்ரை வயசுக்கும் அனுபவத்துக்கும் மரியாதையாய் அவரொட்டு பொடியளலெல்லாம் அம்மான் அம்மானெண்டு கூப்பிட்டு அதுவே நிலைத்துவிட்டது.
கருணாவுக்கு அவ்வளவு வயசுமில்லை ஆனால் அந்தாளையும் இயக்கப்பெடியள் அம்மானெண்டு கூப்பிட்டாங்கள்.ஏனெண்டது தான் எனக்கு விளங்கெலை.

பொதுவா யாழ்ப்பாணப்பக்கம் தாய்மாமனைத் தான் அம்மான் என்பார்கள்.ஊரிலை ஏதாவது பிரச்சனையெண்டா கட்டைப் பஞ்சாயத்துக்கு வாற ஒன்றிரண்டு பெரிசுகளையும் ஊர்ச்சனம் அம்மானெண்டுதான் கூப்பிடும்.

உந்த இயக்கப்பெடியளும் இவை இரண்டு பெரையும் தாய்மாமனா நினைச்சுப் பழகியிருப்பாங்கள் போல கிடக்கு அதுதான் அம்மான் பட்டம்.
நான் சொல்ல வந்தது என் அம்மானெண்ட பெயர் வந்ததெண்டும் அதுக்கான விளக்கமுமில்லை.

கருணா அம்மான் மாவீரர் தினத்தை ஒட்டி எங்கேயோ ஒரு நட்டிலை(சிலவேளை இலங்கையாவும் இருகலாம்)நின்று கொண்டு பேசி ஒளிப்பதிவு செய்து பிறகு அவங்கடை இணையத்தளமொண்டிலை வெளியிட்ட உரையை பார்க்கும் பெரும் பேறு எனக்கும் கிட்டினது.

அம்மான் போட்டாரே ஒரு போடு இந்தியா இல்லாமல் இலங்கையிலை சமாதானம் இல்லையெண்டு.எனக்கெண்டா அவர் இந்தியாவின்ரை கையிலை காலிலை விழுந்தெண்டாலும் இலங்கைக்கு சமாதானம் வாங்கிக் குடுத்துடுவார் போல தான் கிடக்கு.

நான் சும்மா நக்கலுக்குச் சொல்லவில்லை.வன்னித்தலைமை,வன்னிப்புலிகள்,வன்னிராச்சியம் ஒண்டும் அவருக்கு வேண்டாமாம்ஆனால் வன்னியான் கொண்டாடுற மாவீரர் தினம் மட்டும் தனக்கும் வேணுமாம்.அதையும் கிழக்கு மாகாண மாவீர தினமெண்டு தனியாக் கொண்டாடுறதுதானே.

மசிர்


மரத்தடி எறும்புகள்

ஒரே தேவை
எல்லாருக்கும் பொதுவாய்;
தீனி!
சுவையான தீனி.
தேடித் தேடி
அலுத்துப் போகும் உணரிகளுடன்
பயணங்கள் தொடரும்.

எங்கேயோ ஓர் எறும்பு
கண்டு பிடித்திருக்கும்
கரும்புச் சாற்றை;
இழுத்து வந்தால்
குடித்துவிட்டு
சும்மாயிருக்காது
மற்ற எறும்புகள்.

கொண்டு வந்தவை,
கொண்டு வந்தவர்
எல்லாவற்றுக்குமாய்
பதில் விருந்து காத்திருக்கும்.
தப்பிருந்தால்
தட்டிக் கேட்கப்படும்.

ஏதாவது தீனிக்கு
இழுத்துச் செல்கையிலும்
ஓர் ஒழுங்கு.
வழிகாட்டி எறும்புகளின்
பார்வை வரிசையில்
வழிப்பயணம் போகும்
மற்றைய எறும்புகள்.

வழிதவறும் போதெல்லாம்
உணரிகளை நீட்டி
முன்வரும்
வழிகாட்டி எறும்புகள்.
உணரிகளும்
உணரிகளும்
பேசிக்கொண்டதில்
தவறிய வழி புரிந்து போகும்.

நண்டுகளைப் போல
ஒன்றையன்று
பிடித்திழுக்காமல்,
ஒன்றன் பின் ஒன்று
போகத் தெரிந்ததால்!
ஒன்றுக்கு ஒன்று
வழிவிட முடிந்ததால்!

மகிழ்வோடு தொடர்கிறேன்
மரத்தடி எறும்புகளை!

திரும்பிப் பார்த்தபோது..

மின்னற் சிரிப்புகளும் வெகுமாயக் கனவுகளும்
விந்தைக் கவிதையெனும் விரிந்தவிரு சிறகுகளும்
சன்னல் வழியாகத் தனிநீல வானத்தில்
தாவிப் பறக்கின்ற சமர்த்துள்ள மனமொன்றும்
பின்னப் புறப்பட்டால் பெருவெளியும் கைப்பிடிக்குள்
பெற்றுத் தரவல்ல சொற்களுமாய் முளைத்தபின்னர்
என்னைத் தொலைத்துவிட்டு எங்கெங்கோ பயணித்தின்(று)
இந்தக் கடற்கரையில் இளைப்பாற அமர்கின்றேன். (1)


முன்னே மோகனமாய் முழுநீலப் பெருவெள்ளம்.
மூடி கவிழ்த்தாற்போல் மறுநீல வானவெளி.
விண்ணிற் கவியெழுதி விரித்தெடுத்துப் போட்டதைப்போல்
மேகக் கருப்பதனைச் சிவப்பாக்கும் அதிகாலை.
பின்னே நான்திரும்பி பேதுற்ற போதுகளைப்
பேசா மௌனத்தால் பிரித்தெடுத்துப் பார்க்கையிலே
என்னைப் பிரியாமல் எங்கெங்கும் கூடவரும்
என்கால் அடிச்சுவடு இதயத்தின் மீதேறும். (2)


காலக் கணக்குகளும் கவிந்திருந்த இருட்தொகையும்
கன்னம் தாங்கிநின்று கைவியர்த்த பொழுதுகளும்
ஓலப் பெருக்கெடுக்கும் உட்கடலும்; உள்ளத்தில்
ஓங்கிக் குரல்எழுப்பி உணர்வழிந்த நினைவுகளும்
வேலை, விவகாரம் வீணடித்த வாழ்நாளும்
மேலே செலநினைத்துக் கீழ்வீழ்ந்த முயற்சியிலும்
ஆலைக் கரும்பாக அங்கம்பிழி பட்டாலும்
அமுதப் பிழிவாகக் கவிச்சாறு ததும்பியதும் (3)


நிலைமாறி, வழிமாறித் தடுமாறி நெஞ்சும்மாறி,
நெறியாகும் பொறிமாறி நினைவோடும் தடமும்மாறி
விலைமாறி, விதிமாறி, விளக்காகும் அறிவும்மாறி
விழுந்தாலும் திரிந்தாலும் மனக்குகையில் நிலைகொண்டு
அலைமாறி மாறிமாறி அடிக்கின்ற கடல்போல
அடிநாதம் கவியாகும் எனநெஞ்சம் நினைத்தபோது
புலைமாறிப் போயிற்று; பூத்தின்று பொங்கியது
பூமாரி; கவிமாரி; புதுமாரி; கண்ணில்மாரி! (4)


கொட்டிவிட்ட துயரத்தில், கூடிவிட்ட மனத்தெளிவில்,
கற்றுவைத்த அனுபவத்தில், கடந்துவிட்ட வழிச்செலவில்,
வற்றிவிட்ட உயிர்ச்சுனையில், வாடிவிட்ட கவிப்பயிரில்,
மனக்குருத்தின் முளைக்கருவில், மௌனத்தின் இசைப்பரப்பில்,
பற்றிவரும் தீயென்னுள் பாட்டென்னும் சுனைவிரிக்கப்
பண்ணெடுத்தேன்; சிறகவிழ்த்தேன்; விசைத்தெழும்பிப் பீறிவரும்
புத்தமுதப் பாட்டொளியில், பூண்டுவரும் கவிப்புனலில்
பொலிவுற்றேன்; என்னைநான் புதுப்பித்தேன்; உயிர்த்தெழுந்தேன்.


இனியென்றும்,

அலையடிக்க அலையடிக்க ழமாயென் காற்சுவடு
அழியாமல் மணல்மேலும் நெஞ்சினிலும் தடம்பதிக்கும். (5)

என் தந்தையே .. .. . .. !

என் தந்தையே .. .. . .. !

கரு கொடுத்து உருவாக்கினாய்
விரல் பிடித்து நடை பழக்கினாய்

கண்டிப்புடன் கல்வி தந்தாதாய்
பணிவுடன் பாசமும் பொறுமையும் தந்தாய்
நம்பிககையுடன்

கல்லூரி செல்கையில்
தைரியம் என்ற ஆயுதம் பழக செய்தாய்

தன்னம்பிகையுடன் ப்ணிக்கு செல்லும்போது
தன் கடமை முடிந்த்தாய்

உன் இதய்ம் ஓய்வு எடுத்தபோதும்
தவித்து நின்றால் உன் முயற்சிகள்
தோற்றுவிடும் -

என நீ கற்றுதத்த
பாடங்களின் உதவியுடன் உன் ஆசிர்வாதங்களுடனும்
என் ஆயுளுக்கும் ஓடி கொண்டிருப்பேன்.

உன் மரணம் கூட எனக்கு பாடம் தந்தது. - என் தந்தையே . . .. ... !

வேலு பிள்ளை பிரபாகரன்








10 June 2009