பிரபாகரனின் மாவீரர் தினப் பேச்சு கேட்டிருப்பீர்கள் அம்மானின் பேச்சு யாராவது கேட்டீர்களா?நீங்கள் எங்கே கேட்டிருக்கப்போகிறீர்கள் அதெல்லாம் அந்தாள் கிளம்பிய இரண்டு மூண்டு மாதத்துக்குத்தான் ஒரு அலை அடிக்கும் பிறகு பாறாங்கல்லே தூக்கிப் போட்டாலும் அசும்பாத சமுத்திரமெல்லவோ நாங்கள்.
அம்மான் என்றவுடனை இரண்டு அம்மான்கள் நினைவுக்கு வருவார்கள்.ஒன்று இந்தியா தேடிக்கொண்டிருக்கும் பொட்டு அம்மான்மற்றது இந்தியாவைத் தேடிக்கொண்டிருக்கும் கருணா அம்மான்.
இதிலை பொட்டு அம்மான் விடுதலைப்புலிகள் இயக்கத்திலை மூத்த தலைவர் அந்தாளின்ரை வயசுக்கும் அனுபவத்துக்கும் மரியாதையாய் அவரொட்டு பொடியளலெல்லாம் அம்மான் அம்மானெண்டு கூப்பிட்டு அதுவே நிலைத்துவிட்டது.
கருணாவுக்கு அவ்வளவு வயசுமில்லை ஆனால் அந்தாளையும் இயக்கப்பெடியள் அம்மானெண்டு கூப்பிட்டாங்கள்.ஏனெண்டது தான் எனக்கு விளங்கெலை.
பொதுவா யாழ்ப்பாணப்பக்கம் தாய்மாமனைத் தான் அம்மான் என்பார்கள்.ஊரிலை ஏதாவது பிரச்சனையெண்டா கட்டைப் பஞ்சாயத்துக்கு வாற ஒன்றிரண்டு பெரிசுகளையும் ஊர்ச்சனம் அம்மானெண்டுதான் கூப்பிடும்.
உந்த இயக்கப்பெடியளும் இவை இரண்டு பெரையும் தாய்மாமனா நினைச்சுப் பழகியிருப்பாங்கள் போல கிடக்கு அதுதான் அம்மான் பட்டம்.
நான் சொல்ல வந்தது என் அம்மானெண்ட பெயர் வந்ததெண்டும் அதுக்கான விளக்கமுமில்லை.
கருணா அம்மான் மாவீரர் தினத்தை ஒட்டி எங்கேயோ ஒரு நட்டிலை(சிலவேளை இலங்கையாவும் இருகலாம்)நின்று கொண்டு பேசி ஒளிப்பதிவு செய்து பிறகு அவங்கடை இணையத்தளமொண்டிலை வெளியிட்ட உரையை பார்க்கும் பெரும் பேறு எனக்கும் கிட்டினது.
அம்மான் போட்டாரே ஒரு போடு இந்தியா இல்லாமல் இலங்கையிலை சமாதானம் இல்லையெண்டு.எனக்கெண்டா அவர் இந்தியாவின்ரை கையிலை காலிலை விழுந்தெண்டாலும் இலங்கைக்கு சமாதானம் வாங்கிக் குடுத்துடுவார் போல தான் கிடக்கு.
நான் சும்மா நக்கலுக்குச் சொல்லவில்லை.வன்னித்தலைமை,வன்னிப்புலிகள்,வன்னிராச்சியம் ஒண்டும் அவருக்கு வேண்டாமாம்ஆனால் வன்னியான் கொண்டாடுற மாவீரர் தினம் மட்டும் தனக்கும் வேணுமாம்.அதையும் கிழக்கு மாகாண மாவீர தினமெண்டு தனியாக் கொண்டாடுறதுதானே.
மசிர்
.
5 July 2009
அம்மானின் மாவீரர் தினப் பேச்சு
at
4:26:00 am